Thursday, May 26, 2005

Puthandu

This poem i wrote on this Tamil new year..... :)

Download the font here
புத்தாண்டு
==========

புத்தாண்டு, காலையில் அலுவலகத்திற்கு செல்ல
தயாரானேன், என் தாய் தமிழ் நாட்டில் இன்று எல்லோரும்
கொண்டாடமாய் இருப்பார்கள்....

வீட்டை கடந்து சாலை வந்ததும், மறக்காமல் 12 மணிக்கு
தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்ன
நண்பனுக்கு பரிசு வாங்கி அனுப்பினென்...
"மாப்ளே நம்ம செர்ந்து புத்தாண்டு கொண்டாடி 2 வருடம்
ஆகின்றது, நீ நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்"
... அவன் இரவு கூறிய வாழ்துக்கள்.

என் காதலி செல் போனில் சினுங்கினாள், "இந்த ஆண்டு
நாம் இருவரும் செர்ந்து வாழ்க்கை தொடங்க வேண்டும்!!"
அவளது அன்பான கட்டளை.....
முத்தங்களை 800 மைல் தாண்டி அனுப்பினாள்.... என் பங்கிற்கு
நானும் இரண்டு முத்தங்களை பரிசாக காற்றில் அனுப்பினேன்
முகதில் ஒரு இனம் புரியத மகிழ்ச்சி....

சற்று தூரத்தில் இருந்த கோவிலை பார்த்ததும்
வடபழனி கோவிலில், "என் மகன் இரவு பகலாக உழைகின்றான்
அவன் சந்தொஷத்திற்கும் உடல் நலத்திற்கும் எந்த குறையும்
வராமல் பார்த்துகொள்ள வேண்டியது உன் போறுப்பு"
என்று கடவுளுக்கு கட்டளை இட்டு விட்டு தனக்கு எதுவும்
வேண்டாமல் வீடு திரும்பும் என் தாய் நினைவுக்கு வந்தாள்..


அவள் அன்பிற்க்கு என்ன பரிசு தர முடியும்.....??????
கண்டு பிடித்து விட்டேன்... தொலைபேசியில் அழைத்தேன்..
"அம்மா நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?"..
"அய்யா, நான் நல்லா இருக்கேன், நீ உடம்பை பார்த்துக்க
வேலை முக்கியம் தான் ஆனாலும், நேரத்துக்கு சாப்பிடு
நல்லா தூங்கு..அந்த முருகன் அருளால் உனக்கு ஒரு
குறையும் வராது.......

தன் மகன் நன்றாக இருக்கின்றான் என்ற செய்தியை தானே
நம் தாய் பரிசக எதிர் பார்கின்றாள், தொலைவு எவ்வளவு
அயினும் நினைவு நம்மை சுற்றி தானே அவளுக்கு.....
"கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கடவுளும்
தாயும் குணதால் ஒன்று ...." ஆட்டோ சத்ததையும்
மீறி அந்த பழைய பாடல் வரிகள் என் மனதில் ஒலிக்கின்றது.....

--இரா.குமரன்

Boomi

Download the font here


காற்றுக்கு ஏது ஓய்வு அது போல
ஓய்வு இல்லாமல் உன்னை காதலிக்கின்றேன்
கடிகார முள்ளுக்கு, நாம் எதற்கு
சுற்றுகின்றோம் என்றே தெரியாது
அது போல என் நினைவுகளும்
காரணம் ஏதும் அறியாமல்
உன்னையே சுற்றி வருகுதம்மா


மெல்லிய தென்றலுடன் பரிசாய்
வரும் பூக்களின் நறுமணம் போல்
தூக்கத்தின் பரிசாய் உனது கனவுகள்!!
எனக்குள் தட்ப வெட்ப நிலையில்
மாறுதலை உருவாக்கிய தாரகையே...
பெண் பூமி போன்று எதையும்
தாங்குவாள் என்று சொல்வார்களே
நான் என்ன அவ்வளவு பாரமா?
உன் மனதில் இருந்து என்னை
தூக்கி எறிந்து விட்டாய் .........

-இரா.குமரன்.

Viyarvai

Download Fonts here

லட்சங்களே லட்சியமாய் இருந்ததடி எனக்கு
லாவகமாய் என்னை திசை திருப்பினாய்....

சூரன் போன்ற வீரன் இல்லையேனும்
சுருண்டு விழும் கோழை இல்லை நான்....

சூரியன் சுட்டேரித்த போதும் உடல்
மட்டும் தான் வியர்த்தது......

உன் மை விழி என்னை மறுத்து
கண் அசைத்த போது

கண்கள் வியர்த்ததடி கண்ணீராய் !!!!!!!!!!!!!!!!!!!!!

-இரா.குமரன்.

En Kal Nenju

சகியே உன் இதயம் பூ தான்.
எனக்கோ கல் நெஞ்சம்....

உன் பூ இதயத்தில் இருந்த எனது
நினைவுகள் நாளடைவில் வாடி போயின...

ஆனால் உன் நினைவொ என்
கல் நெஞ்சை உடைத்தால் தானடி.......

மனித கல்வெட்டாய் நிற்கின்றேனடி
உன் நினைவுகளை சுமந்தபடி


-இரா.குமரன்

Friday, May 20, 2005

Kalaivani

Download Fonts here

அன்பெ நீ கலை அல்ல எல்லோரும் ரசிப்பதற்கு
நீ சிலை அல்ல எல்லோரும் சீண்டுவதற்கு
நீ சோன்னதை சொல்லும் மைனா அல்ல
மென்மையான புறாவும் அல்ல
நீ கழுகு .
ஆம் என் நெஞ்ச்மெனும் கோழி குஞ்சை
கொத்தி சென்ற கழுகு
உனது சிரிப்பில் சூரியனை சிறை வைத்தவளெ
நீ என் சின்ன மனதை ஆளும் ராணி
என் சொல்லுக்கு நீயே வாணி.
-- இரா.குமரன்.

Thursday, May 19, 2005

Urakkam

Download the font here

என் இனியவளெ, விக்கிரமாதித்யனுக்கு பிறகு
கூடு விட்டு கூடு பாயும் வித்தை அறிந்தவளே !!
என் கூட்டிற்குள் இருப்பது உனது உயிர்.
அன்னையின் சொல்லை கேட்டு "என்னை மறந்துவிடு" என்றாயே,
"உனக்கு அன்னையாக இருபேன்", என்று நீ கூறியது
மட்டும் ஏனோ உனது மறதி நோய் அழித்து விட்டது போலும்.
நீ எனக்குள் பூத்த ஒரு பூங்கா, நான்
சுவாசிக்க மறந்த நாளில் கூட உன்
மலர்களுக்கு உரமாகி உயிர் கொடுத்திடுவென்.
உன் மனம் என்றாவது இந்த மூடனை
உனது மறதியில் இருந்து விடுவிக்குமேயானால்,
எனது கல்லறையில் உனது பூங்காவில் இருந்து
சில கண்ணீர் பூக்களை தூவி விடு, நான்
அன்றைக்காவது நிம்மதியாக
உறங்கிடுவேன்.


--இரா.குமரன்.