Saturday, October 29, 2005

மன்னித்து விடு

குறிஞ்சி மலர் 12 வருடதிற்கு ஒரு முறை தான் பூக்கும்
அதிசயம் தான்.............

ஊட்டி மலர்கள் 1 வருடம் வரை வாடாமல் இருக்குமாம்
அஹா என்ன ஒரு அதிசயம்.

சூரியன் போகும் திசையிலே பார்த்து இருக்குமாம் சூரியகாந்தி
பேரதிசயம்........................

மலரே மன்னித்து விடு இந்த மூட மாந்தர்களை
உன் அதிசயம் அறியாத பெதைகளை....

நீ கண் சிமிட்டும் பொழுது ஒரு நொடிக்குள்
பல முறை பூத்திடும் அல்லி மலர்......
அதன் அழகு முன்பு குறிஞ்சியாவது நிற்பதாவது......

காலை சூரியன் உன்னை தரிசிக்கும் பொழுதும் சரி
மாலை நிலவு உன்னை தாலாட்டும் பொதும் சரி
உன் அழகிய விழி மலர்கள் வாடியதே இல்லையே கண்ணே

உன் விழி மலர்கள் திரும்பிய இடம் எல்லாம்
இந்த உலகமே திரும்புகின்றதெ, சூரியகாந்தியின்
பெருமைசுக்கு நூறானது உனக்கு முன்பு....

மலரே மன்னித்து விடு இந்த மூட மாந்தர்களை
உன் அதிசயம் அறியாத பெதைகளை....

--இரா.குமரன்.

0 Comments:

Post a Comment

<< Home