Saturday, October 29, 2005

செல்லம்மா

கண்கள் மூடாதே செல்லம்மா,
அன்று அம்மாவாசை ஆகுமடி செல்லம்மா.

மாலையில் உலா வாடி என் செல்லம்மா,
மலர்கள் நிலவின் வருகைக்காக காத்திருக்கின்றன செல்லம்மா.

பூங்கா பக்கம் செல்லாதெ செல்லம்மா,
தேனீக்கள் உனை தேடுதடி செல்லம்மா.

நீ வாய் திறந்து பேசினாலடி செல்லம்மா,
மயிலினம் பாட்டென்று ஆடுதடி செல்லம்மா.

உன் சிரிப்போலி கெட்டு செல்லம்மா,
பாவையர் அறுந்தது கொலுசென்று
நிலம் நோக்குவர் செல்லம்மா.

ஆற்றில் நீ நீராடினால் செல்லம்மா,
உன் திருமேனி தொட்ட நீர் யாவும்
உன்னை விட்டு அகல மறுத்ததால்
நீரோட்டம் நின்றதடி செல்லம்மா.

கடை கண் காட்டாதெ செல்லம்மா, நாட்டில்
துறவிகள் என்றும் சில பேர் இருக்கட்டும் செல்லம்மா.

கம்பன் உனை பற்றி அறிந்தாலடி செல்லம்மா,
உனை பாட துயிலெழுவானடி செல்லம்மா.

-இரா.குமரன்.

0 Comments:

Post a Comment

<< Home