Tuesday, September 05, 2006

வானவில்

நிலவு கண்களை கவர்ந்தது
உன் முகமானதால்.
சந்தனம் கைகளை கவர்ந்தது
உன் மேனியானதால்.
பவளம் இதழை கவர்ந்தது
உன் இதழ் ஆனதால்.
மின்னல் கவனத்தை ஈர்த்தது
உன் சிரிப்பானதால்.
தென்றல் பிடித்தது
உன் சுவாசத்தை சுமந்து வந்ததால்
செவ்வானம் இரசித்தேன்
உன் வெட்கத்தின் பிம்பம் ஆனதால்.
வானவில் மட்டும் கண்களின்
வேறுப்பை பெற்றது உன் உடை ஆனதால்.

0 Comments:

Post a Comment

<< Home