Saturday, October 29, 2005

மன்னித்து விடு

குறிஞ்சி மலர் 12 வருடதிற்கு ஒரு முறை தான் பூக்கும்
அதிசயம் தான்.............

ஊட்டி மலர்கள் 1 வருடம் வரை வாடாமல் இருக்குமாம்
அஹா என்ன ஒரு அதிசயம்.

சூரியன் போகும் திசையிலே பார்த்து இருக்குமாம் சூரியகாந்தி
பேரதிசயம்........................

மலரே மன்னித்து விடு இந்த மூட மாந்தர்களை
உன் அதிசயம் அறியாத பெதைகளை....

நீ கண் சிமிட்டும் பொழுது ஒரு நொடிக்குள்
பல முறை பூத்திடும் அல்லி மலர்......
அதன் அழகு முன்பு குறிஞ்சியாவது நிற்பதாவது......

காலை சூரியன் உன்னை தரிசிக்கும் பொழுதும் சரி
மாலை நிலவு உன்னை தாலாட்டும் பொதும் சரி
உன் அழகிய விழி மலர்கள் வாடியதே இல்லையே கண்ணே

உன் விழி மலர்கள் திரும்பிய இடம் எல்லாம்
இந்த உலகமே திரும்புகின்றதெ, சூரியகாந்தியின்
பெருமைசுக்கு நூறானது உனக்கு முன்பு....

மலரே மன்னித்து விடு இந்த மூட மாந்தர்களை
உன் அதிசயம் அறியாத பெதைகளை....

--இரா.குமரன்.

அவள் ஒரு வைரஸ்

அவள் எனக்கு தெரியாமல் என் Heart Disk -ல் save ஆனவள்,
அவள் ஒரு வைரஸ்.

அவள் என்னுள் இருப்பதை உணரும் முன் என் நாடி நரம்பெல்லாம்
பரவினாள்அவள் ஒரு வைரஸ்.

அவள் நினைவுகளால் என்னை செயலிழக்க செய்தாள்
அவள் ஒரு வைரஸ்.

அவள் நினைவுகளை எத்தனை முறை delete செய்தாலும்
மீண்டும் மீண்டும் என் Heart Disk-ல் நிரம்பியவள்
அவள் ஒரு வைரஸ்.

அவளாக என்னை நேசிதாலேயன்றி என்னை காப்பாற்ற
இல்லை ஒரு Anti-virus, ஏனென்றால்
அவள் ஒரு வைரஸ்.

-- கணேசன்.(நரசிம்மா).

செல்லம்மா

கண்கள் மூடாதே செல்லம்மா,
அன்று அம்மாவாசை ஆகுமடி செல்லம்மா.

மாலையில் உலா வாடி என் செல்லம்மா,
மலர்கள் நிலவின் வருகைக்காக காத்திருக்கின்றன செல்லம்மா.

பூங்கா பக்கம் செல்லாதெ செல்லம்மா,
தேனீக்கள் உனை தேடுதடி செல்லம்மா.

நீ வாய் திறந்து பேசினாலடி செல்லம்மா,
மயிலினம் பாட்டென்று ஆடுதடி செல்லம்மா.

உன் சிரிப்போலி கெட்டு செல்லம்மா,
பாவையர் அறுந்தது கொலுசென்று
நிலம் நோக்குவர் செல்லம்மா.

ஆற்றில் நீ நீராடினால் செல்லம்மா,
உன் திருமேனி தொட்ட நீர் யாவும்
உன்னை விட்டு அகல மறுத்ததால்
நீரோட்டம் நின்றதடி செல்லம்மா.

கடை கண் காட்டாதெ செல்லம்மா, நாட்டில்
துறவிகள் என்றும் சில பேர் இருக்கட்டும் செல்லம்மா.

கம்பன் உனை பற்றி அறிந்தாலடி செல்லம்மா,
உனை பாட துயிலெழுவானடி செல்லம்மா.

-இரா.குமரன்.

Tuesday, October 25, 2005

Vetri Thirumagal

என் தாய் மொழி வென்ற திருமகளே!!!
தமிழ் தோற்றதடி உன்னிடம் உன் அழகை
பாட சொற்கள் இல்லாமல்.

இறைவன் எழுதிய பாட்டில் பிழை உள்ளதென்று
உறைத்த நக்கீரனும் நா எழாமல் நின்றானடி
பிரம்மன் எழுதிய பிழை இல்லா காவியத்தை கண்டு.

நானும் தோற்றேனடி உன் மனதில் எனக்கென்று
ஒரு இடம் பிடிக்க முடியாமல் இன்று.