Monday, September 25, 2006

எனது நிலவே

உன்னை நிலவு என்றேன்,
என்னை சூரியன் என்றாய,
நான் எட்டி பார்த்தவுடன் மறைந்து போனாயே !!

Tuesday, September 12, 2006

சிறை

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்
அவள் சிரிப்பதற்காக என்னை கோமாளியாக்கினாள்

Wednesday, September 06, 2006

விந்தை

ஓர் மருத்துவ விந்தை, என் கண்களில்
கண்ணீரிலும் அழியாத
உனது கால் தடம்.

Tuesday, September 05, 2006

வானவில்

நிலவு கண்களை கவர்ந்தது
உன் முகமானதால்.
சந்தனம் கைகளை கவர்ந்தது
உன் மேனியானதால்.
பவளம் இதழை கவர்ந்தது
உன் இதழ் ஆனதால்.
மின்னல் கவனத்தை ஈர்த்தது
உன் சிரிப்பானதால்.
தென்றல் பிடித்தது
உன் சுவாசத்தை சுமந்து வந்ததால்
செவ்வானம் இரசித்தேன்
உன் வெட்கத்தின் பிம்பம் ஆனதால்.
வானவில் மட்டும் கண்களின்
வேறுப்பை பெற்றது உன் உடை ஆனதால்.