Wednesday, November 02, 2005

ஏனடி செல்லம்மா

உன்னை எனடி நிலவிற்கு ஒப்பிட்டேன் ?
செல்லம்மா நீயும் நிலவு போல் நிறம் மாறினாய்.

உன்னை ஏனடி மயிலுக்கு ஒப்பிட்டேன்?
செல்லம்மா நீயும் பறந்து சென்றாய்.

உன்னை ஏனடி அழகிய சிலைக்கு ஒப்பிட்டேன்?
செல்லம்மா நீயும் என் குரலுக்கு செவி கொடுக்கவில்லை.

உன்னை ஏனடி ஓவியத்திற்கு ஒப்பிட்டேன்?
செல்லம்மா உன் கண்ணிலும் நான் தென்படாமல் போனேனடி.

உன்னை ஏனடி தேவதைக்கு ஒப்பிட்டேன்?
செல்லம்மா நீயும் எனக்கு காட்சி தர மறுத்தாய்.

உன் விழியயை ஏனடி சூரியனுக்கு ஒப்பிடேன்?
செல்லம்மா உன் பார்வை கிட்டாமல் என் வாழ்வும் இருண்டதடி.

--இரா.குமரன்.